புதன், 30 மே, 2012

குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என பெற்றோர்கள் புகார் செய்வது எதனால்? குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி?

எல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும். அதற்காக தனக்கு உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கு எவ்வளவு செலவானாலும் சத்தான உணவழிக்க வேண்டும் என பாடுபடுகிறார்கள். ஆனால் குழந்தைகளோ பெற்றோர் கொடுக்கும் உணவு வகைகளை தீண்டுவதே இல்லை. எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிட மறுக்கிறார்கள். இது பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதோடு குழுந்தையை அடித்தல், குழந்தை சாப்பிடாததால் அதனுடன் பேசாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகிறது. ஏன் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள ஒரு உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். • குழந்தைகளுக்கு மிக அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக ஒரு பெரிய சாக்லெட் சாப்பிட்டால் அதற்கு மதிய உணவு தேவைப்படாது. எனவே மதிய உணவு கொடுத்தால் அதை சாப்பிட மறுப்பதில் வியப்பேதும் இல்லை. • பெற்றோர்களுக்கு மற்ற குழந்தைகள் சாப்பிடும் அளவோடு தன் குழந்தை சாப்பிடும் அளவை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் போது எப்போதும் அடுத்த குழந்தையை விட தன் குழந்தை குறைவாகவே உண்பதாக தோண்றும். இது ஒரு மாயத் தோற்றமே. • தன் குழந்தை “நன்றாக சாப்பிடுகிறது” என பிறரிடம் சொன்னால் கண் திருஷ்டி ஏற்பட்டுவிடும் என்று நினைத்துக்கொண்டு பல பெற்றோர்கள் “என் குழந்தை சாப்பிடுவதே இல்லை” என குழந்தையின் முன்பாகவே பிறரிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதை கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பிக்கின்றன. • குழந்தைகள் ஒரே உணவை எப்போதும் விரும்பி உண்பதில்லை அவர்களின் உடலில் என்ன சக்தி குறைவாக உள்ளதோ அந்த சக்தி அதிகமாக உள்ள உணவை விரும்பி சாப்பிடுவார்கள். உடலில் பற்றாக்குறையாக இருந்த சக்தி தேவையான அளவு சேர்ந்தவுடன் அந்த சக்தி இருக்கும் உணவை விரும்ப மாட்டார்கள். உதாரணமாக முட்டையில் உள்ள சக்தி குறைவாக இருக்கும் ஓர் குழந்தை முட்டையை தொடர்ந்து சில காலத்திற்கு விரும்பு சாப்பிடும். அக்குழந்தைக்கு முட்டையில் உள்ள சக்தி தேவையான அளவு உடலில் சேர்ந்தவுடன் முட்டையை அறவே வெறுக்க ஆரம்பித்துவிடும். எனவே ஒரே வகையான உணவை சாப்பிடுமாறு குழந்தையை கட்டாயப்படுத்தக்கூடாது. ஓர் உணவை சாப்பிடவில்லை எனில் வேறு உணவை கொடுத்து உண்ணச் சொல்ல வேண்டும். • தேவைக்கு அதிகமான உணவைக் கொடுத்தால் “உடல்பருமன்” ஏற்பட்டு குழந்தைகள் பெரியவர்களாகும் போது அதுவே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். எனவே உணவுப் பண்டங்களை திணித்து உடல் நோயை உண்டாக்க வேண்டாம்.

திங்கள், 28 மே, 2012

மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர்

நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட் புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம். சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள், இல்லையா? அதே போலத் தான் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மற்றும் வேர்ட் புராசசிங் சாப்ட்வேர் தொகுப்புகளும். இதற்காக நம் சிபியூ டவரைத் தூக்கிக் கொண்டு செல்லவா முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் வேண்டாம். ஒரு சின்ன பிளாஷ் டிரைவ் இருந்தால் போதும். உங்களுடைய பிரியமான, உங்களுடைய விருப்பங்களுக்கேற்றபடி வடிவமைக்கப் பட்ட சாப்ட்வேர் புரோகிராம்களைத் தூக்கிச் சென்று பயன்படுத்தலாம். ஒரு மெமரி ஸ்டிக்கில் எடுத்துச் சென்று உங்களுடையதாக மட்டும் பயன்படுத்தும் பல புரோகிராம்கள் இப்போது புழக்கத் தில் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிளாஷ் டிரைவில் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் வேர்ட் புரோகிராம் முழுவதையும் இன்ஸ்டால் செய்து கொண்டு போய் பயன்படுத்த முடியாது. இதற்கென போர்டபிள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. அவற்றைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அவை புரோகிராம்களையும் அதில் உள்ள ஸ்பெஷல் செட்டிங்குகளையும் பதிந்து வைத்து எடுத்துச் சென்று பயன்படுத்த தருகின்றன. இப்படி அனைத்து புரோகிராம்களும் நமக்குக் கிடைப்பதில்லை. ஒரு சில முக்கிய பயன்பாடு களுக்கான போர்ட்டபிள் புரோகிராம்கள் கிடைக்கின்றன. முதலில் இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கான புரோகிராம் குறித்து பார்க்கலாம். இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசர் புரோகிராம். இதற்கு ஒரு மெமரி கீ ஸ்டிக்கில் 30 எம்பி அளவு இடம் இருந்தால் போதும். இதனை www.portableapps.com/apps.internet/firefox_portable என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இதனை முதலில் டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் மெமரி ஸ்டிக்கை அதன் ஸ்லாட்டில் செருகி ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் டெஸ்க்டாப்பில் இருக்கும் புரோகிராமினை இருமுறை கிளிக் செய்து இன்ஸ்டாலேஷன் செயல்பாட்டை மேற்கொள் ளுங்கள். முதலில் கிடைக்கும் விண்டோக்களில் லைசன்ஸ் அக்ரிமெண்ட் ஆகியவற்றிற்கு சரி என்று கிளிக் செய்து எங்கு இன்ஸ்டால் செய்திட என்று கேட்கும்போது மெமரி ஸ்டிக்கின் டிரைவைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுக்கவும். சில நிமிடங்களில் மெமரி ஸ்டிக்கில் புதிய போல்டர் ஒன்று உருவாக்கப்பட்டு பயர்பாக்ஸின் போர்டபிள் பதிப்பு ஒன்று அதில் இருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்து இயக்கிப் பார்க்கவும். மெமரி ஸ்டிக்கில் இருந்து இயங்கும் பிற புரோகிராம்கள் மற்றும் பைல்களைப் போல இதுவும் சற்று மெதுவாகத்தான் இயங்கும். அது குறித்து கவலைப் படாமல் தொடர்ந்து பிரவுஸ் செய்திடுங்கள். உங்கள் வழக்கமான செட்டிங்குகளை ஏற்படுத்துங்கள். புக் மார்க்குகளை உருவாக்குங்கள். இனி இந்த மெமரி ஸ்டிக் மூலம் நீங்கள் யாருடைய கம்ப்யூட்டரில் வேண்டுமென்றாலும் உங்களுக்குப் பிரியமான பிரவுசர் மூலம் இன்டர்நெட் உலா வரலாம். போர்ட்டபிள் பயர்பாக்ஸ் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் இன்டர்நெட் தளம் சென்று இமெயில்களைக் காண முடியும் என்றாலும் நீங்கள் உங்களுடைய இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் மூலம் அவர்களின் சர்வரில் இருந்து மெயில் களை டவுண்லோட் செய்திட உங்களுக்கு ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம் தேவை. இதற்கென தண்டர்பேர்ட் போர்ட்டபிள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் கிடைக்கிறது. www.portableapps.com/nes/20080502_ thunderbird_portable_2.0.0.14 என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஏற்கனவே முன் பத்தியில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் புரோகிராமினை மெமரி ஸ்டிக்கில் இன்ஸ்டால் செய்தது போல இதனையும் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்து இயக்கி எப்படி டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள தண்டர்பேர்ட் தொகுப்பில் அக்கவுண்ட் உருவாக்கி இமெயில்களை டவுண்லோட் செய்து கையாண்டீர்களோ அதே போல இதிலும் செயல்படலாம். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் டவுண்லோட் செய்திடும் இமெயில்களெல்லாம் மெமரி ஸ்டிக்கிலேயே இடம் பெறும். எனவே மிக அதிக அளவில் இமெயில்களைப் பெறுபவர்கள் சற்று கவனத்துடன் அவற்றை டெஸ்க் டாப்பிற்கு அல்லது இணையத்தில் உள்ள ஸ்டோரேஜ் டிரைவ்களுக்கு மாற்றிவிட வேண்டும். இந்த தொல்லையைத் தவிர்க்க விடுமுறை நாட்களில் வெளியே செல்கையில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் இந்த மெமரி ஸ்டிக் இமெயில் டவுண்லோடிங் செயல்பாட்டை மேற்கொள்ளவும். ஓகே. உங்கள் ஸ்டிக் மூலம் நீங்கள் விரும்பும் வகையில் இணையம் செல்வதும் இமெயில் பார்ப்பதுவும் சரி. வேறு டெக்ஸ்ட் உருவாக்கும் செயல்பாடுகளை மெமரி ஸ்டிக் மூலம் மேற்கொள்வது எப்படி? அதிர்ஷ்டவசமாக நமக்கு ஓர் அருமையான வேர்ட் பிராசசிங் புரோகிராம் கிடைத்துள்ளது. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு தரும் அனைத்து புரோகிராம் வசதிகளும் இதில் உள்ளன. அது ஓப்பன் ஆபீஸ் என அழைக்கப்படும் புரோகிராம் ஆகும். ஓப்பன் ஆபீஸ் சற்று பெரிய புரோகிராம். மெமரி ஸ்டிக்கில் 190 எம்பி இடம் எடுத்துக் கொள்கிறது. இதனை http://tinyurl.com/y84z89 என்ற தளத்திலிருந்து இன்ஸ்டால் செய்திடலாம். இதனை இன்ஸ்டால் செய்வது பயர்பாக்ஸ் மற்றும் தண்டர் பேர்டைக் காட்டிலும் எளிதானது. ஏனென்றால் லைசன்ஸ், கண்டிஷன் என்பதெல்லாம் கிடையாது. இது சற்று நேரம் பிடிக்கும் என்பதால் மெமரி ஸ்டிக்கில் பதியும்போது பொறுமையாக இதனைப் பதிய வேண்டும். இதுவும் செயல்படுகையில் சற்று மெதுவாகவே செயலாற்றும் என்றாலும் இது தரும் வசதிகளுக்காக இதனைப் பொறுத்துக் கொள்ளலாம். போட்டோக்களைக் கையாளவும் நமக்கு ஒரு போர்ட்டபிள் அப்ளிகேஷன் உள்ளது. இதனை எடிட்ணீ என்று அழைக்கின்றனர். இதனை www.portableapps.com/apps/ graphics_pictures/gimp_portable என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இது மெமரி ஸ்டிக்கில் 18 எம்பி இடத்தைக் கேட்கிறது. இந்த பைலை டவுண்லோட் செய்த பின்னர் டபுள் கிளிக் செய்து Extract என்பதில் கிளிக் செய்திடவும். இது Gimp portable என்ற போல்டரை உருவாக்கும். இந்த போல்டரை அப்படியே மெமரி ஸ்டிக்கில் காப்பி செய்திடவும். பின் இன்ஸ்டால் செய்திடவும். பயர் பாக்ஸ், தண்டர் பேர்ட், ஓப்பன் ஆபீஸ் போல இது விண்டோஸ் மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் நன்றாக இயங்குகிறது. போட்டோக்களைக் கையாளவும் ஒரிஜினல் ஆர்ட் ஒர்க் மேற் கொள்ளவும் தேவையான அனைத்து டூல்களும் இந்த புரோகிராமில் கிடைக்கின்றன. பெரும்பான் மையான இமேஜ் பைல்களை இது ஏற்றுக் கொள்கிறது. மேலே சொன்னவை எல்லாம் கடமைகளை மேற்கொள்ள நமக்கு உதவிடும் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள். பொழுது போக்குவதற்கான அப்ளிகேஷன்கள் ஒன்றுமே கிடையாதா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். VLC என்ற புரோகிராம் இதற்கெனவே தயாரிக்கப்பட்டு கிடைக்கிறது. மெமரி ஸ்டிக்கில் 17 எம்பி இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதனை http://tinyurl.com/2erg6s என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். மேலே சொன்ன வழிகளிலேயே இதனையும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். எம்பி3, ஙிMஅ மற்றும் டிவ் எக்ஸ் வீடியோ போன்ற பலவகை ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இந்த போர்ட்டபிள் புரோகிராம் மூலம் இயக்கலாம். பி.டி.எப். பைல்களை நாம் அடிக்கடி திறந்து படிக்க வேண்டியுள்ளது. சிலர் இந்த பைல்களை அறவே பயன்படுத்துவதில்லை. அப்படிப்பட்டவர்களின் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகையில் நாம் பி.டி.எப். பைல்களை எப்படி படிக்க முடியும். இதற்கெனவே http://tinyurl.com/2Vr39c என்ற தளத்தில் Sumatra PDF என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதே போல Clamwin Portable என்ற புரோகிராம் ஆண்டி வைரஸ் புரோகிராமாகவும், 7Zip என்ற புரோகிராம் விண்ஸிப் புரோகிராம் போலவும் செயல்படுகின்றன. ஒரு காலத்தில் செங்கல் ஒன்றில் பாதியளவு ஹார்ட் டிஸ்க் ஒன்று எடுத்துச் சென்று பயன்படுத்தும் விதத்தில் 20 எம்பி டேட்டாவை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. இன்று பாக்கெட்டில் பல ஜிபி டேட்டாவை எடுத்துச் செல்ல முடிகிறது. மேலே குறிப்பிட்ட போர்ட்டபிள் அப்ளிகேஷன்களை ஒரு மெமரி ஸ்டிக்கில் பதிந்து எடுத்து செல்வதன் மூலம் ஒரு கம்ப்யூட்டரை அல்லவா பாக்கெட்டில் எடுத்துச் செல்கிறோம்.

ஹிட்' என்றால் என்ன?

இன்டர்நெட் குறித்து பேசுகையில் பலர் இந்த தளத்தின் ஹிட் எண்ணிக்கை என்ன? என்று கேட்கின்றனர். அல்லது சில தளங்களின் முகப்புப் பக்கத்தில் இத்தனை பேராக நீங்கள் இதனைப் பார்க்கிறீர்கள் என்று கணக்குக் காட்டப்படும். பலர் இதுதான் அந்த தளம் பெற்ற ஹிட்களின் எண்ணிக்கை என எண்ணுகின்றனர். இந்த ஹிட்” என்பது என்ன? அது எதனைக் குறிக்கிறது>? அதனை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? என்று பார்ப்போம். சரியாகச் சொல்வதென்றால் இந்த சொல் குறித்து பலரும் தவறாகவே கருத்து கொண்டுள்ளனர் என்று கூறலாம். பலரும் ஹிட் என்றால் ஓர் இணைய தளத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று குறிப்பிடுவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை ஒருவர் ஓர் இணைய தளத்திற்குச் சென்று பார்த்தால் அதன் ஹிட்களின் எண்ணிக்கை யில் ஒன்று கூடும் என எண்ணுகிறார்கள். இது உண்மை அல்ல. சரியான கணிப்பும் அல்ல. “ஹிட்” என்பது ஒரு வெப் சர்வருக்கு அளிக்கப்படும் வேண்டுகோள் ஆகும். எடுத்துக் காட்டாக நீங்கள் தன்னுடைய இணைய முகப்புத் தளத்தில் ஆறு படங்களை உடையதாக ஓர் இணைய தளம் இருப்பதாகக் கொள்வோம். இந்த தளத்தைப் பெற உங்களுடைய பிரவுசர் இந்த ஆறு படங்களுக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பும். அத்துடன் அத்தளத்தின் எச்.டி.எம்.எல் க்காகவும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். எனவே இந்த வேண்டு கோள்கள் எல்லாம் சேர்ந்தால் மொத்தம் ஏழு “ஹிட்” கள் இந்த தளத்திற்கு அனுப்பப் படுகின்றன. நீங்கள் கூகுள் தேடுதளத்தில் (அல்லது நீங்கள் விரும்பும் எந்த தேடு தளத்திலும்) உங்கள் தேடுதலை அனுப்பி அதற்கான முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு ஹிட்” ஆகக் கருதப்படும். எனவே உங்கள் தேடுதல் சார்ந்து 423 தளங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டால் உங்களுக்கு 423 ஹிட்கள் திரும்ப வந்துள்ளன என்று பொருள். இதுதான் “ஹிட்” என்பதின் உண்மையான பொருள்.

கணனி நினைவகம்

கணனி நினைவகம் என்னும் போது எமக்கு நினைவில் வருவது Hard Disk, CD, DVD போன்ற துனை நினைவங்கள் ஆகும். எனினும் கணனியில் பலதரப்பட்ட நினைவகங்கள் பயன்பாட்டில் உள்ளன 1. நிலையற்ற நினைவகம் (Volatile Memory) மேலே கூறப்பட்ட துனை நினைவகங்கள் மின் இணைப்பு தூண்டிக்கப்படும்போதும் அதில் உள்ள தரவுகள் அழிவுற மாட்டாது இவை நிலையான நினைவகங்கள் ஆகும்(Non Volatile Memory). நிலையற்ற நினைவகங்களில் மின் இணைப்பு தூண்டிக்கப்படும்போதும் அதில் உள்ள தரவுகள் அழிந்து விடும் இவ்வாறான நினைவகங்கள் நிலையற்ற நினைவகங்கள்(Volatile Memory) என அழைப்பர். கீழ்கானும் நினைவகங்கள் இவ்வகையினை சேரும் 1. எழுமாறு அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM) 2. பதிவகங்கள் ( Register) 3. பதுக்கு நினைவகம் ( Cash memory) எழுமாறு அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM) இவ் நினைவகத்தினை கணினியின் பிரதான நினைவகம்(Main memory) என அழைப்பர். கணினியின் மத்திய செயற்பாட்டு அலகிற்கு(Central Processing Unit – CPU) எதாவது ஒரு செயற்பாட்டை செய்வதற்கு தேவையான தரவுகளை அதாவது முறமை மென்பொருள், பிரையோக மென்பொருள், மற்றும் ஏனைய தரவுகளை களஞ்சியப்படுத்தி வைப்பது இவ் நினைவகம் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் செயற்பாட்டு அலகிற்கு இதில் உள்ளவகைகளை நேரடியாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளமயாகும். இதன் பிரவேச காலம் மிகக்குறைவு ஆகையாள் செயற்பாடுகளை மிகவும் வேகமாக செய்ய முடியும். இன் நினைவகத்தின் எதாவது ஒரு இடத்தில் இருந்து தரவுகளை CPU பெற்றுக்கெள்வதனால் இதற்கு ஒரு ஒழுங்குமுறையொன்று தேவையில்லை. இதனால் இன்னினைவகத்ததை எழுமாறு அணுகல் நினைவகம் என அழைப்பர். இவ் எழுமாறு அணுகல் நினைவகங்கள் இருவகைப்படும் 1. இயக்கவியல் எழுமாறு அணுகல் நினைவகம் (DRAM) 2. நியைியல் எழுமாறு அணுகல் நினைவகம் (SRAM) இயக்கவியல் எழுமாறு அணுகல் நினைவகம் (DRAM) நவீன கணினியில் காணப்படும் நினைவக வகை அசைவு எழுமாறு அனுகல் நினைவகம் ஆகும்.( Eg DDR1, DDR2, DDR3 போன்றன – Dynamic Data RAM) இவ் நினைவக கலன்களில் வைக்கப்பட்டு இருக்கும் தரவுகள் செக்கனுக்கு மில்லியன் அளவு மின்துடிப்புக்களை அனுப்பி மீண்டும் மீண்டும் புத்துனர்வூட்டும். Dynamic Data RAM நியைியல் எழுமாறு அணுகல் நினைவகம் (SRAM) இவ் நினைவக கலன்களில் வைக்கப்பட்டு இருக்கும் தரவுகள் அடிக்கடி புத்துனர்வு ஊட்டப்படமாட்டாது. இதனால் இதில் உள்ள தரவுகள் மேல் இன்னும்மொரு தரவு எழுதப்படும்வரை அல்லது மின் இணைப்பு தூண்டிக்கப்படும்வரை தரவகள் நிலையாக இருக்கும். அத்துடன் இவ் நினைவக சிப்கள் மெல்லியனவாகவும், அசைவு எழுமாறு அனுகல் நினைவகத்தின விட வேகம் குறைவானதாகவும் காணப்பட்டது.