உடற் செயல்களும்,உள செயல்களும் சூழ்நிலைக்கு தக்கவாறு திருப்தியானமுறையில் பொருத்தமுற்றால் தான் உடல் உள நலம் ஆரோக்கியமாக இருக்கும்.உடல் நலம் என்பது உடலின் நன்னிலை ,அந்நிலையில் உடல் வன்மையும்,மனத்திறனும் வாழ்கையில் மனநிறைவும் ஏற்படுகின்றது .
பிரச்சினைகள் இல்லாத மனிதர்கள் இல்லை .மனிதனாக பிறந்தஒவ்வொருவருவனும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கும் .அப்பிரச்சினையைதாண்டி அதனை சுவாரசியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவது தான்வாழ்கையின் வெற்றி .அதை விடுத்து அந்த பிரச்சினையைப்பற்றியே சதாநேரமும் நினைத்து கொண்டு வேறெந்த முயற்சிகளும் இல்லாமல் இருக்கும்நிலையில் மனநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு
மனநோய் ஏன் ஏற்படுகின்றது ?
மனநோய் பெரும்பாலும் சிந்தனை ,உணர்ச்சி ,செயலாற்றல்,நினைவாற்றல்போன்றவற்றில் ஏற்படும் குறைகளால் ஏற்படுகின்றது .
இக்கட்டுரை எழுதும் அளவிற்கு நான் மனவியல் துறையில் தேர்ச்சிபெற்றவன் அல்ல.நான் வாழ்கையில் சந்தித்த ஒரு ஒரு பெண்ணின்அனுபவத்திலிருந்து வடிந்ததே இக்கட்டுரை .
நான் அவ் அனுபவத்திலிருந்து பெற்ற பெரும்பாலான விடயங்களை சுமந்துவருகின்றது இக்கட்டுரை .
மனநோய் ஏற்பட மிக முக்கிய காரணம் ஏற்படும் சிந்தனை குழப்பங்கள் ஆகும் .
மனநோய் ஏற்பட்டவரின் சிந்தனையானது அவரது அறிவிற்கும்அனுபவத்திற்கும் பொருத்தமற்றதாக இருக்கும் .கற்பனை உலகத்தில்சஞ்சரிப்பார்கள் .நடக்கவே நடக்காத வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாதவிடயங்கள் நடக்கும் என வீண் கற்பனை கொள்வார்கள் .
ஒரு விடயத்தை நேரடியாக கூறாமல் சுற்றி வளைத்து பேசுவார்கள் .மேலும்கூறும் விடயத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பிருக்காது .சொன்னதையே திரும்பதிரும்ப சொல்வர் .ஒரு விடயத்தை பேசிக்கொண்டிருக்கும் போது திடிரென்றுசம்பந்தமில்லாமல் வேறொரு பேச்சை பேசுவார்கள் .திடிரென்று பேச்சைநிறுத்துவார்கள் .
சில சமயம் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் மெளனமாக இருப்பார்கள்இலேசான ஞாபக மறதியும் இருக்கும் .
சிந்தனை குழப்பத்தில் பல தவறான நம்பிக்கைகள் ஏற்படும் .இத்தகையநம்பிக்கை அவரது கல்வி அறிவிற்கும் ,கலாச்சார பழக்கவலக்கத்திற்கும் சற்றுபொருந்தாமல் இருக்கும் .இது தவறானது என எவ்வளவு சொன்னாலும்அத்தகைய தவறான நம்பிக்கைகளை மனதிலிருந்து அகற்ற முடியாது .தன்னைசுற்றியுள்ளவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தன் வாழ்கையைசீரழிப்பதாகவும் உணர்வார்கள் .
இது தவிர எவ்வளவு தான் மறக்க முயன்றாலும்,தடுக்க முயன்றாலும் ,சிலகெட்ட என்ணங்களும் உணர்ச்சிகளும் மனதில் உண்டாகும் .அவ் எண்ணங்கள்தவறு என உணர்ந்தும் செய்வார்கள் .
மனிதர்களது உணர்ச்சி மாற்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாறுபடும்.ஆனால் மனநோயாளியை பொறுத்த வரையில் அவர்களது உணர்ச்சிகள்அளவுக்கதிகமாகவோ ,குறைந்தாதகோ மற்றும் சூழ்நிலைக்கும் ,சந்தற்பத்திற்கும்சற்று பொருந்தாமல் இருக்கும் .சாதாரணமாக ஒரு மனிதன் கோபநிலைக்குசென்றால் .அந்த கோபநிலை ஏற்பட காரணமான சூழ்நிலை மாறியவுடன்சாதாரண மனநிலைக்கு வந்துவிடுவார் .ஆனால் மனநோயாளிக்குஅப்படியல்ல.அந்த கோப உணர்ச்சி வெகு நாட்கள் நீடிக்கும் .கோபம் ஏற்படயாராவது காரணமாக இருந்தால் அவர்களை பழிவாங்குவதற்காக மடத்தனமானவேலைகளை செய்வார்கள் .
தங்களை பற்றி பிறரிடம் பெருமையாக கூறுவார் .மற்றவர்களைஇழிவானவர்களாகவும் ,கெட்டவர்களாகவும் சித்தரிப்பார்கள் .இடைக்கிடையில்நான் அப்படியல்ல எனவும் பெருமையாக சொல்வார்கள் .
மிதமிஞ்சிய கோபம் ,பொறாமை ,வெறி சந்தேக உணர்ச்சிகள் ,பழிவாங்கல் சிலவேலை தற்கொலை எண்ணம்களும் தோன்றும் .இதன்போது அவர்களதுசெயல்கள் மிகவும் மடத்தனமாகவும் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாமலும்இருக்கும் .
நன்றி ....
உங்கள்
maill senter
Mr Kanaharaja
vavuniya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக