திங்கள், 25 ஜூன், 2012

எங்கேயடி நீ?


 

எங்கே சிறகடித்தாய்?
எங்கே சிக்குண்டாய்?
எங்கே உன் முகவரிகள்
என் தேடலுக்கு முகவரி இல்லை ,
முடிந்தால் முகப்பு மட்டும் எழுது
அதன் தொனியில் உன் சுமை அறிவேன் .
ஏதோ எழுத சொல்கிறது - அது
உன்பேரை உரசிக்கொள்ள சொல்கிறது.
என் எழுத்தின் சாயல் எல்லாம் உன் சாரல் ,
என் சங்கதிகளை சொல்லி எழுத என் மதி
உன் சாலைகளில் வீழ்ந்து கிடக்கிறது ,
உன் முகம் பார்த்து பேச முடியவில்லை ,
வார்த்தைகோணி விரல்கள் கோலமிடுகிறது,
என் காகிதங்களை கசக்கி எறிந்தாயோ?
என் கனவுகளை களைந்தெடுக்க முடியவில்லை ,
ஆசை என்பது கொழுந்துவிட்டு
உன் மௌனம் சம்மதம் என்று சொல்கிறது ,
என்மேல் இரக்கம் காட்டு என்று சொல்லவில்லை
இறங்கி வா உனக்காக எதையும் துறப்பேன்
தடைகளை உடைத்தெறிந்து வாழவைப்பேன்
வாழ்ந்து காட்டுவோம் என்கிறேன் சம்மதமா?
தேய்ந்து போகிறேன் உன் மௌனத்தால் ,
நகர்ந்து போகிறது இனிமை காலங்கள் ,
காதலித்தது குற்றமா? கண்ணீர்தான் சாபமா?
நான் உன்னை நினைப்பது பாவமா
சொல்லடி என் கிளியே?
ஈரமில்லையா உன் இதயத்தில்?
காதல் இல்லையா அதன் ஓரத்தில்
நானும் இல்லையா சிறு தூரத்தில்
ஔவை வழி வந்தவளா நீ???
நான் சுட்டபழம் இல்லையடி
கொடித்தண்டில் பழுத்தவளே!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக