வெள்ளி, 22 ஜூன், 2012

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

கணிணி பாவிப்பதில் சுகாதாரமாக இருக்க சில குறிப்புகள் கீழே வாசியுங்கள். Repetitive Stress Injuries பொருத்தமற்ற மேசை கதிரைகளை பாவிப்பதன் மூலம் இருக்கும் நிலை பிழையாவதனால் தலை கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். உங்கள் உடலின் சுகாதாரத்தைப் பற்றி அக்கறை காட்டும் நீங்கள் இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்று பார்ப்போம். இருப்பு  கணணியை பாவிக்கும் போது உங்கள் உடம்பு அதிகம் அசையாது ஆகையால் பொருத்தமான கதிரை ஒன்றை பாவிப்பது அவசியமாகும்.  தலையனை, பெட்டிகள், மற்றும் பெரிய புத்தகங்கள் போன்றவை உங்கள் கதிரையை தேவையான படி செய்து கொள்ள உதவும். உங்கள் பாதங்கள் கீழே படாவிட்டால் அந்த உயரத்திற்கேற்ற ஒரு பெட்டியையோ பல புத்தகங்களையோ பாதத்தின் கீழ் வைத்துக்கொள்ளலாம். கணிணியின் கதிரையை சரியாக அமைத்துக்கொள்ளல்  உங்கள் கதிரை சரியாக அமைந்து ஆனால் கணிணியின் மேசை உயரத்தில் அமைந்தால் தலையனைகளை பாவித்து உயரத்தை அதிகறித்துக்கொள்ளலாம். அல்லது உயர்ந்த கதிரையொன்றை பாவிக்கலாம் அல்லது உயரமற்ற ஒரு மேசையை தேடிக்கொள்ளலாம்.  கணிணியின் keyboard உங்கள் வயிற்றின் உயரத்தில் அமைய வேண்டும் அது மார்பு மட்ட உயரத்திலிருந்தால் உங்கள் கைகள் தோல்கள் மற்றும் கழுத்து சோர்வு அடையலாம். கணிணி Slump  உங்கள் கணிணியின் மேசை கதிரை சரியாக அமைந்து இருந்தாலும் கதிரையில் ஒழுங்காக சாய்ந்து உட்கார்ந்து typing செய்ய வேண்டும். typing செய்யும்போது அதிகம் உடம்பை வளைக்கக்கூடாது அதனால் உங்கள் இடுப்புக்கு பாதிப்பு வரக் கூடும். அது மட்டுமல்ல இவற்றையும் கவனியுங்கள்… Keyboarding  Keyboard ஐ பாவிக்கும்போது அதனை உங்கள் முன் மிக அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனை மிக தொலைவில் வைத்தால் எட்டியபடி வேலை செய்ய நேரிடும். Straight Shot  Keyboard ஐ பாவிக்கும் போது உங்கள் மணிக்கட்டை நேராக வைத்திருங்கள். Natural Curve  உங்கள் விரல்கள் இயற்கையாகவே வளைந்து அமைந்துள்ளது நீங்கள் type செய்யும்கோது அதனை நிமிர்த்தி நேராக்க வேண்டாம். Thor's Hammer vs. Butterfly Dance  மென்மையாக type செய்யுங்கள். இடி விழுவது போல் அடி கொடுக்கத் தேவையில்லை. மென்மையாக தொட்டதும் இலகுவாக வேலை செய்யும் அது ஒரு வண்ணத்துப்பூச்சி நடனமாடுவது போலிருக்கும். Mousing  அனைத்து கணிணிகளிலும் mouse காணப்படுகின்றது. அதனை சரியாக பாவிக்காவிட்டால் அது திரும்பி உங்களை கடித்தவிடலாம். Squeeze Play  சிலர் Mouse ஐ அழுத்தமாக பிடிப்பார்கள். இருந்தாலும் அதனை மெதுவாக கையாளுவதும் அதனை அமத்தும் போது கைகளை இருக்கமாக வைக்காமலும் பாவிக்க வேண்டும்.  சில Mouse கள் கைகளுக்கு மிக பெரியதாக இருந்தால் சிறிய Mouse ஒன்றை மாற்றிக்கொள்ள வேண்டும். Straight Shot  Keyboard பாவிப்பது போலவே Mouse பாவிக்கும்போதும் உங்கள் மணிக்கட்டை நேராக வைத்திருங்கள். Eye Strains இடது பக்கம், வலது பக்கம், மேலாக, கீழாக, Monitor ஐ எந்த நிலையில் வைப்பது?  உங்கள் கண் பார்வைக்கு சற்று கீழாக computer monitor (screen) ஐ வைத்திருக்க வேண்டும். monitor ஐ மிக உயரமாக அல்லது கீழாக வைப்பதன் மூலம் அது தலை வலியை ஏற்படுத்தலாம். இதனால் கழுத்து, தோல்கள், பாதிக்கப்படலாம்.  உங்கள் கண் பார்வை எங்கே செல்கின்றதோ உங்கள் உடலும் அத்திசைக்கு போகிறது. Monitor ஐ மிகவும் கீழாக வைத்திருப்பது மூலம் உங்கள் கதிரையும் பிரச்சினையாகலாம். Blinding Light யன்னல்கள், உற்புர ஒளி உங்கள் கணிணி பாவணைக்கு கடினமாக இருக்கும். நேரடி ஒளி இருக்கும் போது monitor ஐ பார்ப்பது மிக கடினமாக இருக்கும். கணிணியை யன்னலுக்கு அருகிலிருந்து அகற்றுவது அல்லது யன்னல்களுக்கு ஒரு திரையை போடுவது நன்று. எழுந்து சில நிமிடங்கள் நடமாடுங்கள்:  வீட்டை சுற்றி ஒரு முறை உலாவிவிட்டு வாருங்கள்.  நண்பர்களுடன் கதையுங்கள்.  பசி ஏற்பட்டால் உணவு அருந்த எழும்புங்கள்.  உங்கள் கண்களைப்பற்றிய கவனம் செலுத்துங்கள். வேலைகளை சற்று நிறுத்தி தொலைவிலுள்ள காட்சிகளை பாருங்கள். இதனால் உங்கள் கண்களுக்கு இடைவெளி கிடைக்கும். Real World Cyberspace மற்றும் கணிணி பாவிப்பது ஒரு பொழுதுபோக்காக அமையலாம், ஆனாலும் உண்மை உலகில் என்ன நடப்பது என்பதையும் பார்க்க வேண்டும். Cyberspace இல் உங்களை துளைத்துவிடாதீர்கள். (-இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தினால் இலவசமாக வெளியிடப்படும் க.பொ.த சா/த (தரம்- 11) பாடசாலை மாணவர்களுக்கான Information and Communication Technology பாடத்துக்கான கையெட்டில் இருந்து இவ்விடயங்கள் எடுக்கப்பட்டது -) AZEEM MOHAMMED

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக