கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையின் இசெட் புள்ளிகளை இரத்துச் செய்து மீளக்கணிப்பிடுமாறு உயர்நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரண்டு பாடத்திட்டங்களுக்கான இசெட் புள்ளிகளை வெவ்வேறாக கணிப்பிடுமாறு இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருட உயர்தரப் பரீட்சையின் இசெட் புள்ளிகளை கணிப்பிட்ட விதத்தில் தவறு உள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்க தீர்ப்பை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற உயர் தரப் பரீட்சையின் இசெட் புள்ளிகளில் தவறு உள்ளதாக இதன்போது மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய எற்கனவே அறிவிக்கப்பட்ட இசெட் புள்ளிகளை இரத்துச் செய்து புதிதாக அதனை கணிப்பிடுமாறு உயர்நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக