ஞாயிறு, 24 ஜூன், 2012

பிளேம் கணணி வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை


மத்திய கிழக்கு வலயத்தில் பரவுவதாக இனங்காணப்பட்ட பிளேம் என்ற கணணி வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களை தெளிவுபடுத்த இலங்கை கணணி அவசர அழைப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய நாட்டிலுள்ள 200 நிறுவனங்களுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்தா குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொடர்பாடல் சங்கம் அண்மையில் சைபர் எச்சரிக்கையொன்றை விடுத்திருந்தது.

இதற்கமைய பிளேம் எனப்படும் கணணி வைரஸ்சில் இருந்து கணணிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 



Tag: நியூஸ்பெஸ்ட், சக்தி செய்திகள், பிளேம் கணணி வைரஸ், மத்திய கிழக்கு வலயம், கணணி வைரஸ் தொடர்பில் கவனம், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்,  அவசர அழைப்புப் பிரிவு, தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக